ஜவுளித்துறை அமைச்சகம்
கைத்தறித் துறையில் பணிபுரியும் பெண்களின் வருமானம் மற்றும் பணிச்சூழலை மதிப்பிடுவதற்கான ஆய்வு
Posted On:
25 JUL 2025 1:55PM by PIB Chennai
நான்காவது அகில இந்திய கைத்தறி தொழில் புரியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2019-20 அறிக்கையின்படி, நாடு முழுவதும் 35,22,512 கைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 9,75,733 பேர் ஆண்கள், 25,46,285 பேர் பெண்கள், மற்றும் 494 பேர் திருநங்கைகள். கைத்தறித் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த பாலின வாரியான மற்றும் மாநில வாரியான தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.
அந்த தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 1,17,025 ஆண் தொழிலாளர்களும் 1,26,549 பெண் தொழிலாளர்களும் கைத்தறி துறையில் பணியாற்றி வருகின்றனர். புதுச்சேரியில் 607 ஆண் தொழிலாளர்களும் 1083 பெண் தொழிலாளர்களும் இந்த துறையில் பணிபுரிந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கைத்தறித் துறையில் பணிபுரியும் பெண்களின் வருமான நிலை மற்றும் பணிச்சூழலை மதிப்பிடுவதற்கான ஒரு குறிப்பிட்ட ஆய்வு அரசாங்கத்தால் செய்யப்படவில்லை. இருப்பினும், திட்டவட்டமான தலையீடுகளின் செயல்திறன் தனிப்பட்ட நிறுவனங்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த தலையீடுகள் வருவாய் மற்றும் வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளன மற்றும் நெசவாளர்களின் வேலைச்சூழலை மேம்படுத்தியுள்ளன என்று ஆய்வு காட்டுகிறது.
இந்தத் தகவலை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று (25.07.2025) மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2148298)
AD/SM/KR
(Release ID: 2148409)