மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் முதன்மை தேர்வு முடிவுகள் 2025
Posted On:
25 JUL 2025 11:46AM by PIB Chennai
மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் முதன்மை தேர்வு முடிவுகளின் ஒரு பகுதியாக நேர்முகத் தேர்வு மற்றும் ஆளுமை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் வரிசை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதி குறித்த சான்றுகள் சரிபார்ப்புக்கு பின்னரே இறுதி செய்யப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது வயது, கல்வித் தகுதி, சாதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவுக்கான சான்றிதழ் உட்பட தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் நேர்முகம் மற்றும் ஆளுமைத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேர்முகம் மற்றும் ஆளுமை தேர்வுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை அதற்கான இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் இந்த இணையதளம் 15 நாட்கள் வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான விதிமுறைகளின்படி விரிவான விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய ஏதுவாக https://upsconline.gov.in என்ற இணையதள முகவரியில் இம்மாதம் 29-ம் தேதி முதல் (29 ஜூலை 2025) அடுத்த மாதம் (12 ஆகஸ்ட் 2025) 12-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது குறிப்பிட்ட கல்வித் தகுதி சான்றிதழை சமர்ப்பிக்காதவர்கள் அதற்கான சான்றுகளை ஒருமுறை பதிவு செய்வதற்கான தொகுதியில் சமர்ப்பிக்கலாம் என்றும் அவ்வாறு கல்வித் தகுதி சான்றை சமர்ப்பிக்காதவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்களது விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 04.09.2024-ம் தேதி அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் தேர்வு தொடர்பான விதிமுறைகளை கவனமாக படித்து அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வயது, பிறந்த தேதி, கல்வித்தகுதி, சாதி சான்றிதழ் (எஸ்சி/எஸ்டி/ஓபிசி) பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவுக்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டியது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும். நேர்முகத் தேர்வு மற்றும் ஆளுமை தேர்வின் போது அது தொடர்பான அசல் சான்றிதழை சரிபார்ப்பதற்காக விண்ணப்பதாரர்கள் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148219
***
AD/SV/AG/KR
(Release ID: 2148391)