கலாசாரத்துறை அமைச்சகம்
கீழடி அகழாய்வு குறித்த தொல்பொருள் ஆய்வுத்துறையின் அறிக்கை
Posted On:
24 JUL 2025 4:57PM by PIB Chennai
தமிழ்நாட்டின் வைகை நதிப்படுகையில் உள்ள கீழடியில் தொல்பொருள் ஆய்வுக்கான இடங்களை தென்னிந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டறிந்தது. இதையடுத்து முக்கியமான இடங்களில் மாநில தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் கல்வி நிறுவனங்களால் 2014-15, 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது மாநில தொல்பொருள் ஆய்வுத்துறையால் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகழாய்வு தொடர்பான அறிக்கையை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை 2024 பிப்ரவரி 29 அன்று உத்தரவிட்டதை அடுத்து நடைமுறையில் உள்ள விதிகளின்படி தலைசிறந்த நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வுக்கு தலைமை ஏற்ற தொல்பொருள் ஆய்வாளரின் அறிக்கை நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டது. அவரது ஒப்புதலுடன் நிபுணர்களின் முடிவுகளையும் இணைத்து அதிகாரப்பூர்வ அறிக்கையை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிடும். கீழடி அகழாய்வின் தலைமை ஆய்வாளர் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு நிபுணர்களின் கருத்துகள் அவருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதிபூண்டுள்ளது.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2147792)
AD/SMB/AG/DL
(Release ID: 2147955)