சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்தியாவில் காற்று மாசுபாடு மற்றும் சாம்பல் மேலாண்மை
Posted On:
24 JUL 2025 3:56PM by PIB Chennai
சாம்பலில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய துகள்கள் மற்றும் நச்சு உலோக சுவடுகள் இருப்பதால், அறிவியல்பூர்வமற்ற சாம்பல் மேலாண்மை நிலச் சீர்கேடு, சுகாதார அபாயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஆபத்து போன்ற வடிவங்களில் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி சாம்பல் பயன்பாட்டு அறிவிக்கை 2021-ஐ வெளியிட்டது. இதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த நோக்கங்கள் மற்றும் காலக்கெடுவில் நிலக்கரி அல்லது பழுப்பு நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்கள் 100% சாம்பல் பயன்பாட்டை உறுதி செய்வதை கட்டாயமாக்குகிறது.
நிலக்கரி அல்லது பழுப்பு நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களிலிருந்து பெறப்படும் சாம்பலைப் பயன்படுத்துவதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த 'மண் பரிசோதனையின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் விவசாயம்' என்பதை இந்த அறிவிக்கை பரிந்துரைக்கிறது. விவசாயத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சாம்பலைப் பயன்படுத்துவது நிலத்தில் ஊட்டச்சத்து திறனை அதிகரிப்பதன் மூலமும் மண்ணுக்கு நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலமும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 2024-25 நிதியாண்டில், மொத்த சாம்பல் பயன்பாட்டில் 326.8 மில்லியன் டன்களில் சுமார் 4 மில்லியன் டன் (1.2%) சாம்பல் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டது.
இந்த அறிவிக்கை, மீட்டெடுக்கப்பட்ட சாம்பல் குட்டைகளில் சூரியசக்தி மின் நிலையம் அல்லது காற்றாலை மின் நிலையம் அமைத்தல் ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.
மேலும், இந்த அறிவிக்கை, அனல் மின் நிலையங்கள் மூலம் செயல்படும் சாம்பல் குளத்தைச் சுற்றி பசுமைச் சூழலை உருவாக்குவதையும் கட்டாயமாக்குகிறது.
மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (SPCB) அல்லது மாசு கட்டுப்பாட்டு குழு (PCC) ஆகியவை சாம்பல் பயன்பாட்டு அறிவிக்கை, 2021 இன் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கான அமலாக்க மற்றும் கண்காணிப்பு அமைப்புகளாகும். இந்த அறிவிக்கையின் விதிகளை அமல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் தொடர்புடைய மாவட்ட நீதிபதிக்கு பொதுவான அதிகார வரம்பு உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), சீரழிந்த நிலங்களில் பல்லுயிரியலை வளர்ப்பதற்காக குறிப்பிட்ட தாவர இனங்களை (மூங்கில் இனங்கள்) பயன்படுத்தி சாம்பல் குவிப்புகளை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சுற்றுச்சூழல்-புத்துணர்ச்சி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 'சாம்பல் மேலாண்மை மற்றும் பயன்பாட்டு இயக்கம்', மூங்கில் தோட்டம் அல்லது பொருத்தமான குறிப்பிட்ட தாவர இனங்கள் மூலம் சாம்பல் குவிப்புகளை நிலைப்படுத்துவதற்கும் சுற்றுச்சூழல் ரீதியாக புத்துயிர் பெறுவதற்கும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NEERI) நிபுணத்துவத்தைப் பயன்படுத்த அனல் மின் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
AD/SM/KR
(Release ID: 2147882)