பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 479 ஏகலைவா மாதிரி உண்டுஉறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன: திரு துர்காதாஸ் உய்கே

Posted On: 23 JUL 2025 4:07PM by PIB Chennai

நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. பழங்குடியினர் நல அமைச்சகத்துடன்   41 அமைச்சகங்களும், துறைகளும் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நீர்ப்பாசனம், சாலைகள், வீட்டுவசதி, மின்மயமாக்கல், வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு போன்ற பல்வேறு பழங்குடி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மொத்த பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்குகின்றன.

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலருக்கும் அவர்களின் சொந்த சூழலில் தரமான கல்வியை வழங்குவதற்காக, ஏக்லைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளியை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டில் பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான சிறப்பு வசதிகளுடன், இப்பள்ளிகள் நவோதயா வித்யாலயாக்களுக்கு இணையாக இருக்க வேண்டும்.  தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 728 பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 479 பள்ளிகள், 138336 மாணவர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2147305)

VL/IR/AG/KR/DL


(Release ID: 2147470)
Read this release in: English , Urdu , Hindi , Bengali