சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த 2021-22 முதல் 2025-26 ம் நிதியாண்டு வரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ. 33,081.82 கோடி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUL 2025 4:05PM by PIB Chennai
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. இதற்காக 2021-22 முதல் 2025-26-ம் நிதியாண்டு வரை ரூ.64,180 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2021-22 முதல் 2025-26 ம் நிதியாண்டு வரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ.33,081.82 கோடி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
10,609 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5,456 நகர்ப்புற ஆரோக்கிய மையங்கள் இந்த முன்முயற்சியின் கீழ் வலுப்படுத்தப்படவுள்ளது. 2,151 வட்டார பொது சுகாதார அமைப்புகள் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 744 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் 621 அவசர சிகிச்சைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
AD/IR/SG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2146921)
வருகையாளர் எண்ணிக்கை : 16