கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு திட்டம்
Posted On:
22 JUL 2025 1:34PM by PIB Chennai
அரசு 31.05.2023 அன்று ”கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு” திட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது. இது முன்னோட்ட பரிசோதனை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அளவில் சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தல் அலகுகள், நியாய விலைக் கடைகள் உள்ளிட்ட வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு இந்திய அரசின் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தப் பெரும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்கீழ் இதுவரை 11 மாநிலங்களில் 11 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சேமிப்பு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 1000 மெட்ரிக் டன் கொள்ளவில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கும் உள்ளடங்கும்.
15.2.2023க்குப் பிறகு நாட்டில் 5,937 புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 29 சங்கங்களும் புதுச்சேரியின் புதிய 3 சங்கங்களும் அடங்கும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. 30.6.2025 அன்றைய நிலவரப்படி நாட்டில் 73,492 கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 4532 சங்கங்களும் புதுச்சேரியில் 45 சங்கங்களும் கணினிமயமாக்கப்படுகின்றன. இதுவரை நாட்டில் 59,920 கூட்டுறவு கடன் சங்கங்கள் தொழில் நிறுவன வளத் திட்டமிடல் (ஈ.ஆர்.பி) மென்பொருளில் இணைந்துள்ளன.
இதனை இன்று (22 ஜூலை 2025) மக்களவையில் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.
***
AD/TS/KR
(Release ID: 2146907)