ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தப்படுகிறது: மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்
Posted On:
22 JUL 2025 3:04PM by PIB Chennai
இந்திய ஜவுளி மதிப்பின் வலிமையை வெளிப்படுத்தவும், ஜவுளி மற்றும் ஆடை அலங்காரத் துறையில் சமீபத்திய முன்னேற்றம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்தவும், ஜவுளித் துறையில் ஆதாரம் மற்றும் முதலீட்டிற்கு இந்தியாவை மிகவும் விருப்பமான இடமாக நிலைநிறுத்தவும், உலகளாவிய மெகா ஜவுளி நிகழ்வை அதாவது பாரத் டெக்ஸ் 2025 ஐ ஏற்பாடு செய்வதில் ஜவுளி அமைச்சகம், ஏற்றுமதி மேம்பாட்டு குழுமங்கள் மற்றும் சங்கங்களுக்கு ஆதரவளித்துள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, நியூசிலாந்து, பின்லாந்து உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட நாடுகளில் 22க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தேசிய ஆடை அலங்கார வடிவமைப்பு நிறுவனம் முறையான ஒத்துழைப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் மற்றும் ஆசிரிய பரிமாற்றங்கள், கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள், இரட்டை பட்டம் மற்றும் இரட்டைத் திட்டங்கள், கூட்டு பாடத்திட்ட மேம்பாடு மூலம் இந்த ஒத்துழைப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. எஃப்ஐடி (நியூயார்க்), யுஏஎல்(யுகே), இஎன்எஸ்ஏஐடி(பிரான்ஸ்) மற்றும் பன்கா(ஜப்பான்) போன்ற நிறுவனங்களுடன் கூட்டாண்மைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், சுமார் 100க்கும் மேற்பட்ட தேசிய ஆடை அலங்கார வடிவமைப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களும், பல ஆசிரியர்களும் சர்வதேச பரிமாற்ற திட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
இந்த சர்வதேச ஈடுபாடுகள், கல்வித் திறனை வளர்ப்பதன் மூலமும், புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும், அறிவுசார் பரிமாற்றத்தை செயல்படுத்துவதன் மூலமும் உலகளாவிய ஜவுளி மற்றும் ஆடை அலங்காரத் துறையில் இந்தியாவின் நிலை மேம்படுகின்றன. அவை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உலகளாவிய வடிவமைப்பு முறைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஏற்ப ஊக்குவிக்கின்றன.
இத்தகவலை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2146755)
AD/IR/SG/KR
(Release ID: 2146855)