சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பாராளுமன்ற கேள்வி: - மனித-வனவிலங்கு மோதல்களை தவிர்க்க நடவடிக்கை
Posted On:
21 JUL 2025 3:52PM by PIB Chennai
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மனித வனவிலங்கு மோதல்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மனித வனவிலங்கு மோதலை கையாளுவது குறித்த ஆலோசனைக் குறிப்பு 2021 பிப்ரவரியில் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. துறைகளுக்கிடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை, மனித- வனவிலங்கு மோதல் நடைபெறும் இடங்களை அடையாளம் காணுதல், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுதல், விரைவு எதிர்வினை குழுக்களை அமைத்தல், இழப்பீட்டு நிவாரணத்தின் அளவை மறுபரிசீலனை செய்ய மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை உருவாக்குதல், இந்த மோதலில் பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்தவர்களுக்கு 24 மணி நேரத்தில் விரைந்து நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் மற்றும் வழிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இந்த ஆலோசனை பரிந்துரைக்கிறது.
யானை, காட்டெருமை, சிறுத்தை, பாம்பு, முதலை, குரங்கு, காட்டுப் பன்றி, கரடி உள்ளிட்ட விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல்களைத் தடுக்க வழிகாட்டுதல்களை அமைச்சகம் கடந்த 21.03.2023 அன்று வெளியிட்டுள்ளது.
வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் நிர்வகிக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்குகிறது.
முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த மாநில வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது.
மனித வனவிலங்கு மோதல் குறித்து பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146354
***
AD/TS/GK/LDN/KR/DL
(Release ID: 2146561)