பாதுகாப்பு அமைச்சகம்
ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தை பாதுகாப்பு இணையமைச்சர் பார்வையிட்டார்
Posted On:
18 JUL 2025 1:14PM by PIB Chennai
பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் ஜூலை 16 & 17-ம் தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தைப் பார்வையிட்டார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆர்டிஎல்), ஆராய்ச்சி மையம் இமாரத் (ஆர்சிஐ) மற்றும் ஏவுகணை கிளஸ்டர் ஆய்வகங்களின் மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகம் (ஏவுகணை கிளஸ்டர் ஆய்வகங்கள்) ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் ஏவுகணைகள் மற்றும் ஆயுத அமைப்புகள் திட்டத்தை அவர் ஆய்வு செய்தார்.
டிஆர்டிஎல், ஆர்சிஐ ஆகியவற்றின் பல்வேறு முக்கிய பணி மையங்களை திரு. சஞ்சய் சேத் பார்வையிட்டார். அங்கு, மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றி அமைச்சருக்கு விளக்கி எடுத்துரைக்கப்பட்டது.
அதிநவீன ஆயுத அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருவதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளை அமைச்சர் பாராட்டினார். தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப்படைகளை தொடர்ந்து வலுப்படுத்துமாறு அறிவியல் சமூகத்தை அவர் வலியுறுத்தினார்.
----
(Release ID: 2145738)
AD/TS/PKV/KPG/RJ
(Release ID: 2145875)