சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோட்டயத்தில் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் தொடங்கி வைத்தார்

Posted On: 17 JUL 2025 6:00PM by PIB Chennai

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐஐடி) பிரதமரின் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி மற்றும் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சக செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் பிரசாத் கிருஷ்ணா, அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் கோட்டயம் ஐஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி கோட்டயம் ஐஐஐடி-ல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 480 பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில்  150 இளைஞர்களுக்கு இணையதளம் தொடர்பாகவும், 300 பெண்களுக்கு தலைமைத்துவம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படும்.  இந்த பயிற்சியின் போது பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதோடு, வேலைவாய்ப்புகளுக்கும் சுயதொழில் வாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மூலம் சிறுபான்மை சமூகத்தினர், சமூகப் பொருளாதார அதிகாரம் பெறுவதை நோக்கமாக கொண்ட  பிரதமரின் வளர்ச்சி திட்டத்தின் பயன்களை எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2145575

***

 

AD/TS/GK/AG/DL


(Release ID: 2145609) Visitor Counter : 2