தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஹரியானாவில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
प्रविष्टि तिथि:
17 JUL 2025 3:53PM by PIB Chennai
2025 ஜூன் 24-ம் தேதி அன்று ஹரியானாவின் பானிபட் நகரில் பெண் ஒருவர் ரயில் பெட்டியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரயில் பாதையில் தூக்கி வீசப்பட்டதாக வெளியான ஊடக செய்தியைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது.
இந்த ஊடகத் தகவல் உண்மையாக இருப்பின் அது மனித உரிமைகள் மீறல் தொடர்பாக கடும் பிரச்சனைகளை எழுப்புவதாக இருக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ரயில்வே வாரிய தலைவர், ரயில்வே அமைச்சகம் மற்றும் ஹரியானா காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் அதிகாரிகள் அவருக்கு வழங்கிய இழப்பீடு குறித்தும் அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145484
***
AD/TS/GK/AG/DL
(रिलीज़ आईडी: 2145606)
आगंतुक पटल : 23