கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏஎம்பி 2047 என்ற வாகன தொழில்துறை ஆலோசனை செயல் திட்ட உருவாக்கப்பணி- மத்திய அமைச்சர் திரு குமாரசாமி தொடங்கி வைத்தார்

Posted On: 17 JUL 2025 4:30PM by PIB Chennai

ஏஎம்பி 2047 என்ற வாகன  தொழில்துறை ஆலோசனை செயல் திட்ட உருவாக்க நடைமுறைகளை மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் திரு குமாரசாமி புதுதில்லியில் இன்று (17.07.2025) தொடங்கி வைத்தார். 2047-ம் ஆண்டில் இந்தியாவின் வாகனத் தொழில்துறையின் நவீன முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு ஒரு செயல்திட்டத்தை நோக்கி இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டது.

பல்வேறு மத்திய அமைச்சகங்கள் வாகனத் துறை சங்கங்கள் இந்திய தொழில் கூட்டமைப்பு, வாகன சோதனை அமைப்புகள் ஆகியவை இந்த செயல்திட்டத்திற்கான ஆலோசனைகளை வழங்கும். மின்சார வாகனத் தொழில்துறை தொடர்பான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மின்னேற்ற கட்டமைப்புகள் போன்றவை குறித்த விரிவான செயல்திட்டம் வகுக்கப்படும். 

இதில் 7 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு 2030, 2037, 2047 ஆகிய ஆண்டுகளை இலக்காகக் கொண்டு இவை ஒவ்வொரு ஆண்டிலும் எட்டப்பட வேண்டிய இலக்குகள் தொடர்பான திட்டம் உருவாக்கப்படும்.

-----

(Release ID: 2145507 )

AD/TS/PLM/KGP/DL


(Release ID: 2145604) Visitor Counter : 2