கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நொய்டாவில் உள்ள இந்திய சமையல் கலை நிறுவனத்தில் புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

प्रविष्टि तिथि: 16 JUL 2025 5:02PM by PIB Chennai

நொய்டாவில் உள்ள இந்திய சமையல் கலை நிறுவனத்தில்(ஐசிஐ) புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில, பிபிஏ, எம்பிஏ சமையல் கலை வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இன்று உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் கியான் பூஷன் பங்கேற்று மாணவர்களை வரவேற்றார்.

சமையல் கலைக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன என்று அவர் பேசும் போது குறிப்பிட்டார். சுற்றுலா, விருந்தோம்பல் துறைகளில் திறன் அடிப்படையிலான கல்வியை ஊக்குவிக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

புதிய மாணவர்களிடையே உரையாற்றிய இந்திய சமையல் கலை நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநர் பேசுகையில், இந்த நிறுவனத்தின் சாதனைகளையும், நவீன பாடத்திட்டங்களையும் விவரித்தார். சமையல் கலைத்துறையில், மாணவர்களுக்கு விரிவான வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145247  

----

SS/TS/SMB/KPG/DL


(रिलीज़ आईडी: 2145343) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati