விவசாயத்துறை அமைச்சகம்
இந்தியா - அர்ஜெண்டினா இடையே வேளாண் பணிக்குழுக் கூட்டம் – இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை
Posted On:
16 JUL 2025 5:35PM by PIB Chennai
இந்தியா - அர்ஜெண்டினா இடையேயான விவசாய ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்த 2-வது கூட்டுப் பணிக்குழு கூட்டம் நேற்று (15.07.2025) நடைபெற்றது, இந்தியா சார்பில் வேளாண் துறை செயலாளர் திரு தேவேஷ் சதுர்வேதி, இந்தக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். அர்ஜெண்டினா தரப்பில் அந்நாட்டு வேளாண்துறைச் செயலாளர் திரு செர்ஜியோ ராயெட்டா பங்கேற்றார். விவசாயத்திலும் அதனுடன் தொடர்புடைய துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.
இரு நாடுகளும் வேளாண் துறையில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது இருதரப்புக்கும் பயனளிக்கும் என்று திரு தேவேஷ் சதுர்வேதி கூறினார். விவசாயத் துறையில் இயந்திரமயமாக்கல், பூச்சி கட்டுப்பாடு, பருவநிலைக்கு ஏற்ற விவசாயம், கூட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புக்கும் அறிவுப் பகிர்வுக்கும் அதிக வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அர்ஜெண்டினாவின் உறுதிப்பாட்டை திரு செர்ஜியோ ராயெட்டா எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், கால்நடை பராமரிப்புத் துறை, வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2145267)
SS/TS/PLM/DL
(Release ID: 2145342)