ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்து வரும் இந்திய ஜவுளித் தொழில்களில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் அழைப்பு

Posted On: 16 JUL 2025 3:32PM by PIB Chennai

ஜப்பான் பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று (2025, ஜூலை15) இந்திய ஜவுளித்துறையில் நிலவும் வர்த்தக போக்கு குறித்த கண்காட்சியை டோக்கியோவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர்  திரு கிரிராஜ் சிங் தொடங்கிவைத்தார். பின்னர் ஜப்பானைச் சேர்ந்த பெரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உயர்நிலைக்குழு கூட்டத்தை நடத்தினார். இந்திய ஜவுளித் தொழிலைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு ஜப்பானைச் சேர்ந்த இறக்குமதியாளர்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தவும், ஜவுளி வர்த்தகத்தில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும் இக்கண்காட்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிப் தயாரிப்புகளில் உலகின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமான ஒய்கேகே நிறுவன தலைவர்களுடன் அமைச்சர் பேச்சு நடத்தினார். ஹரியானாவில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒய்கேகே நிறுவனம் மற்ற மாநிலங்களிலும் தங்களது உற்பத்தி நிறுவனங்களைத் தொடங்க ஆர்வம் தெரிவித்தது. பிரதமரின் மித்ரா ஜவுளிப் பூங்காக்களில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

ஜவுளித்துறையில் கவனம் செலுத்தப்படுவதுடன், இந்தியா-ஜப்பான் இடையேயான கூட்டாண்மையை கொண்டாடும் வகையில் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழில் துறையினர் பங்கேற்ற உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜவுளித்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் திரு சிபி ஜார்ஜ் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான தொழில்துறை தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய திரு கிரிராஜ் சிங், உலகளாவிய ஜவுளித்துறையில் இந்தியாவின் வலிமை குறித்து எடுத்துரைத்தார். வளர்ந்து வரும் இந்திய ஜவுளித் தொழில்களில்  கூட்டாளியாக பங்கேற்குமாறு ஜப்பான் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145169

***

SS/TS/IR/AG/KR/DL


(Release ID: 2145328) Visitor Counter : 5