சுற்றுலா அமைச்சகம்
பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம்
Posted On:
16 JUL 2025 11:07AM by PIB Chennai
மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் தொழில் அவை தேசிய இளையோர் சமையல் போட்டியை புதுதில்லியில் உள்ள பிஎச்டி இல்லத்தில் முன்னோட்ட நிகழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் விருந்தோம்பல் பிரிவில் இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்களின் சிறந்த சமையற்கலையை வெளிக்கொணரும் வகையிலும், கண்டறியும் வகையிலும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இதற்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், தலைமை இயக்குநருமான திரு சுமன் பில்லா உரையாற்றியதாவது:- இந்தியாவில் மறைந்து வரும் சமையல் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். நமது சமையல் பாரம்பரியம், கலாச்சார நினைவுகள் மற்றும் பிராந்திய தொழில்நுட்பங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதன் மரபுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் உலகளவில் சமையல் துறையில் இந்தியாவின் பங்களிப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கான போட்டிகள் நாடு முழுவதும் மண்டல அளவில் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி புதுதில்லி பூசாவில் உள்ள ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் (ஐஎச்எம்) 2026 ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளது. வடக்கு மண்டலத்தில் சண்டிகரில் உள்ள ஏஐஎச்எம் கல்வி நிறுவனத்தில் 2025 ஆகஸ்ட் 6 அன்றும், கிழக்கு மண்டலத்தில் கொல்கத்தாவில் ஐஎச்எம் கல்வி நிறுவனத்தில் 2025 செப்டம்பர் 18 அன்றும் மேற்கு மண்டலத்தில் மும்பையில் உள்ள ஐஎச்எம் கல்வி நிறுவனத்தில் 2025 நவம்பர் மாதத்திலும் தென் மண்டலத்தில் கோவளத்தில் உள்ள ஐஎச்எம் கல்வி நிறுவனத்தில் 2025 டிசம்பர் 18 அன்றும் நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145096
***
VL/TS/IR/AG/KR
(Release ID: 2145125)
Visitor Counter : 2