புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தூய்மையான எரிசக்தி கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்ய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது - மத்திய அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி
प्रविष्टि तिथि:
15 JUL 2025 5:40PM by PIB Chennai
மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் உள்ள தேசிய ஒளி மின்னழுத்த ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி பார்வையிட்டார். அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்தியாவின் சூரிய மின்சக்தி ஆற்றல் எதிர்காலத்திற்கான ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் உயர்திறன் வாய்ந்த குறைந்தவிலையிலான சிலிகான், சோலார் செல்களை உருவாக்கும் பணிகளை ஆதரிப்பதில் அமைச்சகம் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார்.
சிறப்பான, மலிவான மற்றும் அளவிடக் கூடிய சூரிய மின்சக்தி ஆற்றலுக்கு உலகம் தீர்வை தேடும் நிலையில் இந்தியா இந்த கண்டுபிடிப்புக்கு தலைமை வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த தொழில்நுட்பம் 30 சதவீதத்திற்க்கும் அதிகமான செயல்திறனை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டது என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்வதன் மூலம் சூரிய மின்சக்தி ஆற்றலை அனைத்து இந்தியர்களும் அணுகக் கூடிய வகையில் மாற்ற இயலும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2144923
***
AD/TS/SM/GK/AG/DL
(रिलीज़ आईडी: 2144974)
आगंतुक पटल : 16