உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பத்ம விருதுகள்–2026க்கான விண்ணப்பங்களை 2025 ஜூலை 31 வரை சமர்ப்பிக்கலாம்

Posted On: 15 JUL 2025 5:14PM by PIB Chennai

2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான நடைமுறை 2025 மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கு விண்ணபிப்பதற்கான, கடைசி நாள் 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் https://awards.gov.in என்ற தேசிய விருதுகள் தளத்தில் ஆன்லைன் மூலம்  மட்டுமே பெறப்படும்.

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதுகள் ஆகும். 1954-ல் ஏற்படுத்தப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. இந்த விருது 'சிறப்புப் பணிகளை' அங்கீகரிக்கிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சாதனைகள் மற்றும் சேவைக்காக இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.

இது தொடர்பான விவரங்கள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் https://mha.gov.in 'விருதுகள் மற்றும் பதக்கங்கள்' என்ற தலைப்பிலும், பத்ம விருதுகள் தளத்திலும் https://padmaawards.gov.in உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144889

***

AD/TS/IR/SG/DL


(Release ID: 2144961) Visitor Counter : 3