பாதுகாப்பு அமைச்சகம்
தற்சார்பு இந்தியா: டிஆர்டிஓ மற்றும் பிபிநகர் எய்ம்ஸ் ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செலவு குறைந்த மேம்பட்ட கார்பன் ஃபைபர் கால் செயற்கை உறுப்பை அறிமுகப்படுத்தியுள்ளன
Posted On:
15 JUL 2025 12:40PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆர்டிஎல்) மற்றும் பிபிநகர் எய்ம்ஸ் இணைந்து உருவாக்கியுள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது செலவு குறைந்த மேம்பட்ட கார்பன் ஃபைபர் கால் செயற்கை உறுப்பு, 2025 ஜூலை 14 அன்று, தெலங்கானாவின் பிபிநகர் எய்ம்ஸில் வெளியிடப்பட்டது. தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவியை பிரபல விஞ்ஞானியும், டிஆர்டிஎல் இயக்குநருமான டாக்டர் ஜி ஏ ஸ்ரீனிவாச மூர்த்தி, பிபிநகர் எய்ம்ஸ் செயல் இயக்குநர் டாக்டர் அகந்தம் சாந்தா சிங் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
உரிய பாதுகாப்பு காரணியுடன் 125 கிலோ வரையிலான எடைகளை தாங்குவதற்கு ஏற்ற வகையில் இக்கருவி சோதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகை எடையுடைய நோயாளிகளுக்கு ஏற்றவகையில் மூன்று வகைகளாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மாதிரிக்கு இணையான செயல்திறனுடன் உயர்தரமிக்க மற்றும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய வகையில் இது வழங்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த கால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இதே போன்ற கருவியானது இரண்டு லட்சம் ரூபாய் என்ற விலையில் இறக்குமதி செய்யப்படுவதுடன் ஒப்பிடும் போது இங்கே உற்பத்தி செய்யப்படும் இந்த தயாரிப்பு 20,000 ரூபாய்க்கும் குறைவான செலவுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே, இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்தர செயற்கை உறுப்புகளுக்கான அணுகலை கணிசமாக மேம்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144797
***
AD/TS/IR/SG/KR
(Release ID: 2144828)
Visitor Counter : 5