ஆயுஷ்
azadi ka amrit mahotsav

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் மூன்று நாள் தேசிய கருத்தரங்கு நாளை தொடங்குகிறது

Posted On: 12 JUL 2025 12:30PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் , ஷல்யாகான் 2025- என்னும் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்கிறது. நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தேசிய கருத்தரங்கு அறுவை சிகிச்சையின் தந்தையாக மதிக்கப்படும் புகழ்பெற்ற ஆச்சார்ய சுஷ்ருதரை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

ஜூலை 14, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ள தொடக்க விழாவில், மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு  பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார். கௌரவ விருந்தினர்களாக ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடேச்சா, ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின்  துணைவேந்தர் பேராசிரியர் சஞ்சீவ் சர்மா, மற்றும் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) தனுஜா நேசரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் பொது அறுவை சிகிச்சைகள், அனோரெக்டல் அறுவை சிகிச்சைகள் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட நேரடி அறுவை சிகிச்சை செயல்விளக்கங்கள் கருத்தரங்கில் இடம்பெறும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144180

***

 

(Release ID: 2144180)

AD/PKV/DL


(Release ID: 2144212)