தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகாரில் 74 சதவீத வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்

Posted On: 11 JUL 2025 6:45PM by PIB Chennai

பீகாரில் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கும் நடவடிக்கை இரண்டாம் கட்டமாக வீடு வீடாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் படிவங்களை அனுப்பி வைக்கும் கடைசி தேதிக்கு இன்னும் 14 நாட்கள் மீதம் உள்ள நிலையில் மொத்தம் உள்ள 7 கோடியே 90 லட்சம் வாக்காளர்களில் 74 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்தப் படிவங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பதிவேற்றல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று (11.07.2025) மாலை 6.00 மணி நிலவரப்படி கடந்த 17 நாட்களில் 5,87,49,463 படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி அதிகாரிகள் இதுவரை சேகரித்த மொத்த கணக்கெடுப்பு படிவங்களில் 3.73 கோடி படிவங்கள் பிஎல்ஓ செயலி – இசிஐ வளைதளம் மூலம் வெற்றிகரமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்கள் சமர்ப்பிக்க 2025 ஜூலை 25 கடைசி தேதியாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144093

***

AD/GK/AG/DL


(Release ID: 2144112)