சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இந்திய சைகை மொழியைப் பயன்படுத்தி காது கேளாத மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பது குறித்த தேசியப் பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
11 JUL 2025 5:49PM by PIB Chennai
இந்திய சைகை மொழியைப் பயன்படுத்தி காது கேளாத மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பது குறித்த தேசியப் பயிலரங்கு புதுதில்லியில் இரண்டு நாள் நடைபெற்றது. சமூக நீதி, மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் இந்திய சைகை மொழி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இப்பயிலரங்கில் காது கேளாத மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இதில் பங்கேற்றுப் பேசிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், இந்திய சைகை மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இது காது கேளாதோரின் கல்வி மற்றும் இதர வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார். காது கேளாதோர் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
காது கேளாதோருக்கான கல்வியில் தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார். இந்த இரண்டு நாள் பயிலரங்கில் நாடு முழுவதிலுமிருந்து காது கேளாதோர் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உட்பட 180-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
----
(Release ID: 2144063)
AD/TS/PLM/KPG/SG/DL
(रिलीज़ आईडी: 2144110)
आगंतुक पटल : 11