நிதி அமைச்சகம்
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட ஆறு போலி நிறுவனங்கள் மீது பெங்களுரு ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குனரகம் நடவடிக்கை
Posted On:
11 JUL 2025 4:58PM by PIB Chennai
பெங்களூருவில் நடைபெற்று வரும் ஒரு வழக்கின் விசாரணையுடன் தொடர்புடைய தொடர் நடவடிக்கையில், பெங்களூரு மண்டல ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு இயக்குநரகத்தின் அதிகாரிகள், தில்லியில் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது ரூ.266 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான மோசடி விலைப்பட்டியல்கள் உருவாக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் போலி நிறுவனங்களிடமிருந்து ரூ.48 கோடி மதிப்புள்ள மோசடியான உள்ளீட்டு வரி வரவு பெறப்பட்டுள்ளதும் அடங்கும்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் உண்மையான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு இல்லாத போலி நிறுவனங்களை உருவாக்கி, வருவாயை அதிகரிக்கும் வகையில் சுழற்சி முறையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் ஒரு நிறுவனத்தை பங்குப் பரிவர்த்தனை வாரியத்தில் பட்டியலிட்டுள்ளதுடன், உள்ளீட்டு வரி வரவு பெறுவதிலும் மோசடியில் ஈடுபட்டு இருந்தனர்.
வர்த்தக நடவடிக்கை இல்லாத நான்கு நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுள்ளதாக காட்டப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையின் போது, இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபர், இந்த போலியான நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை நிர்வகித்த சட்டரீதியான பட்டய கணக்காளர்களில் ஒருவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடத்தியதில், ஆறு போலி நிறுவனங்களை உருவாக்கிய பிறகு. அந்த நிறுவனங்களின் உருவாக்கம் மற்றும் பங்குதாரர் முறை, அதில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுடன், பட்டய கணக்காளர் ஒரு காலத்தில் இந்த போலி நிறுவனங்கள் சிலவற்றில் இயக்குநராகவும் செயல்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்களின் வளாகத்தில் நடந்த சோதனைகளின் போது, விலைப்பட்டியல்கள் மற்றும் முத்திரைகள் போன்ற போலி ஆவணங்கள், அவரது நிறுவன வளாகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அப்பாவி முதலீட்டாளர்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தும் இத்தகைய மோசடி குறித்து பெங்களூருவில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வுத் தலைமை இயக்குநரகத்தின் மண்டல பிரிவு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுழற்சி முறையிலான வர்த்தகம் மற்றும் போலியான உள்ளீட்டு வரி வரவு மூலம் சரக்கு மற்றும் சேவை வரியில் மோசடி செய்யப்பட்டுள்ளதைக் கண்டறிந்த பெங்களூருவில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வுத் தலைமை இயக்குநரகத்தின் மண்டல பிரிவு அதிகாரிகள், இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அண்மையில் அந்த வாரியத்துடன் குறிப்பிட்ட தரவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144036
***
AD/TS/SV/KPG/DL
(Release ID: 2144107)