மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இந்தியாவின் அறிவுலக வழிகாட்டிகள்:வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்குச் செயல் திட்டத்தை மத்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் திரு சுகந்தா மஜூம்தார்
Posted On:
11 JUL 2025 2:59PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்குச் செயல் திட்டத்தை மத்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும் என்று மத்திய கல்வி இணையமைச்சர் திரு சுகந்தா மஜூம்தார் கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத்தின் கெவாடியாவில் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு இன்று நிறைவடைந்தது. இதில் பங்கேற்று பேசிய மத்திய கல்வி இணையமைச்சர் திரு சுகந்தா மஜூம்தார், புதிய தேசிய கல்விக் கொள்கை, தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டதாகக் கூறினார். இந்திய மதிப்புகளுடன் கூடிய உலகத் தரத்திலான கல்வியே இந்தக் கொள்கையின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அவர் கூறினார். ஜெஇஇ, நீட், கியூட் உள்ளிட்ட தேர்வுகள் தற்போது 13 மொழிகளில் நடத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டில் உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 1.57 கோடியாக இருந்தது என்றும் 2021-ம் ஆண்டு அது 2.07 கோடியாக அதிகரித்தது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது ஒரு சீர்திருத்தம் மட்டுமல்ல என்றும் இது இந்திய கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய அம்சம் என்றும் அவர் தெரிவித்தார். மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், இக்கொள்கையை மையப்படுத்தி முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்று திரு சுகந்தா மஜூம்தார் கேட்டுக் கொண்டார்.
-----
(Release ID: 2143997)
AD/TS/PLM/KPG/SG/DL
(Release ID: 2144085)