இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘மகளிர் நிலை உயரும்போது, நாடு வளர்கிறது’: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே

Posted On: 09 JUL 2025 1:28PM by PIB Chennai

கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்று சிறந்து விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலம் மோதிநகரில் உள்ள பளுதூக்குதல் வாரியர்ஸ் அகாடமியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே பார்வையிட்டார். அவருடன் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு, தலைமைப் பயிற்சியாளர் விஜய் சர்மா, இந்திய பளு தூக்குதல் கூட்டமைப்பு  தலைவர் திரு சஹ்தேவ் யாதவ், தலைமை நிர்வாக அதிகாரி திரு அஸ்வனி குமார் ஆகியோர் சென்றிருந்தனர்.

பளுதூக்குதல் தலைமை தேசிய பயிற்சியாளர் திரு விஜய் சர்மாவால் நிறுவப்பட்ட பளுதூக்குதல் வாரியர்ஸ் அகாடமி, எதிர்கால சாம்பியன்களை உருவாக்குவதற்காக மிகவும் அதிநவீன வசதியுடன் அமைக்கப்பட்டதாகும். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் ஆதரவுடன் செயல்படும் இந்த அகாடமி, விளையாட்டு மேம்பாட்டிற்கான முழுமையான சூழலை அளிக்கிறது.

இதன் குடியிருப்புப் பிரிவில் 30 வசதியான அறைகள் உள்ளன, அவை 60 விளையாட்டு வீரர்கள் வரை தங்கக்கூடியவையாகும். தற்போது, இந்த அகாடமி 8-14 வயதுடைய 40 நம்பிக்கைக்குரிய இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு துடிப்பான மையமாக உள்ளது. அவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு உள்ளிட்ட மேம்பட்ட 15 விளையாட்டு வீரர்களுடன் பயிற்சி பெறுகிறார்கள்.

இளம் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே உரையாற்றிய திருமதி காட்சே, கேலோ பாரத் நிதி 2025-ன் கீழ், திறமைகளைக் கண்டறிவது மட்டுமல்லாமல், உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் சமூக ஈடுபாடு மூலம் அதை நிலைநிறுத்தும் ஒரு சூழல் அமைப்பை தாங்கள் உருவாக்கி வருவதாக கூறினார். மகளிர் நிலை உயரும்போது, நாடும் வளர்கிறது என்று தெரிவித்த அவர், திறமையாளர்களை கண்டறிந்து, லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்று தாங்கள் உறுதியளிப்பதாகவும் திருமதி காட்சே கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2143361

***

VJ/TS/IR/AG/KR

 


(Release ID: 2143454)