மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
குஜராத்தின் கெவாடியாவில் மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு
प्रविष्टि तिथि:
09 JUL 2025 11:44AM by PIB Chennai
குஜராத்தின் கெவாடியாவில் 2025 ஜூலை 10,11 ஆகிய தேதிகளில் மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டிற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கல்வி இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் மற்றும் கல்வி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
தேசிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்பட்டு 2025 ஜூலை 29 தேதியுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த மாநாடு நடைபெறுகிறது. கல்வி நிறுவனங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், எதிர்காலத்திற்கான வழிவகைகளை ஒருங்கிணைந்து வடிவமைப்பதற்கும் இம்மாநாடு வழிவகுக்கிறது.
கொள்கையின் அடுத்த கட்ட இலக்குகளுடன் மத்திய பல்கலைக்கழகங்கள் சீரமைக்கப்படுவதை உறுதி செய்தல், கல்வி நிறுவனங்களின் புதுமை கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல்களை செயல்படுத்துதல் மற்றும் பகிரப்பட்ட சவால்கள் குறித்து கல்வித் தலைவர்களிடையே உரையாடலுக்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவை குறித்து இரண்டு நாள் மாநாட்டில் விவாதங்கள் நடைபெறவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143322
***
VJ/TS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2143385)
आगंतुक पटल : 27