ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள் பெண்களே: மத்திய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங்

प्रविष्टि तिथि: 04 JUL 2025 4:38PM by PIB Chennai

பெண்கள் தலைமையிலான சுயஉதவிக் குழுக்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜம்மு & காஷ்மீர் கிராமப்புற வாழ்வாதார இயக்கம், கோன்மோ பகுதியில் இன்று லட்சாதிபதிகள் சகோதரிகள் மாநாட்டை நடத்தியது. மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இதில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஜம்மு & காஷ்மீர் கிராமப்புற மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் திரு. ஜாவித் அஹ்மத் தார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சௌஹான், பெண்களே "உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள்" என்று பாராட்டினார். கிராமப்புற பெண்களுக்கு ஆதரவளிப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெண்களுக்கு அதிகாரமளித்து முன்னேற்றுவதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பெண்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஆறு சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு மத்திய அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதுடன், மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அவர்கள் பெற்ற வெற்றிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

கண்ணியத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்க்கையை நடத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை, தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் அரசுக்கு பெண் பயனாளிகள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142216

***

AD/TS/GK/AG/DL


(रिलीज़ आईडी: 2142289) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi