குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.1%-மும், உற்பத்தித்தியில் 35.4%-மும், நாட்டின் ஏற்றுமதியில் 45.73%மும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் பங்களிப்பாக உள்ளது : மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர்
Posted On:
04 JUL 2025 3:26PM by PIB Chennai
மும்பையில் உள்ள மின் அளவீட்டு கருவிகள் வடிவமைப்பு நிறுவனம் மற்றும் காதி & கிராமத் தொழில்கள் ஆணையம் அலுவலகங்களில் நேற்று (2025 - ம் ஆண்டு ஜூலை 3 - ம் தேதி ) மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு. மஞ்சி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, மும்பையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இரண்டாவது பெரிய பங்களிப்பை வழங்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் திரு மஞ்சி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை 30.1%- பங்களிப்பதாகக் கூறினார். மேலும், நாட்டின் தொழிற்சாலை உற்பத்தியில் 35.4% - ம் மற்றும் ஏற்றுமதியில் 45.73% -மும் பங்களிப்பை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொண்டுள்ளன. 2020 - ம் ஆண்டு ஜூலை 1 - ம் தேதி தொடங்கப்பட்ட உதயம் போர்ட்டல், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இலவச, காகிதப் பயன்பாடற்ற, சுயமாக அறிவிக்கப்பட்ட பதிவு செயல்முறையை வழங்குகிறது. இன்றுவரை அதன் தரவுத்தளத்தில் 3.80 கோடிக்கும் அதிகமான அலகுகளைக் கொண்டுள்ளது என்று திரு. மஞ்சி தெரிவித்தார். மறுபுறம், முறைசாரா குறு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், முன்னுரிமைத் துறை அடிப்படையில் கடன் வழங்குதல் போன்ற முறையான சலுகைகளை அணுகுவதற்கும் ஜனவரி 11 - ம் தேதி தொடங்கப்பட்ட உதயம் உதவி போர்ட்டலின் தரவுத்தளத்தில் 2.72 கோடிக்கும் அதிகமான அலகுகள் உள்ளன. இந்த 6.5 கோடி MSME அலகுகள் இன்றுவரை 28 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன அலகுகளின் எண்ணிக்கை பதினைந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குறித்துப் பேசிய திரு. மஞ்சி, இந்தத் திட்டம் கைகள் மற்றும் உபகாரணங்களால் பணிபுரியும் 18 வகையானத் தொழில்களைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது என்று கூறினார்.
பண்ணை அல்லாத துறையில் குறுந்தொழில் நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய கடனுதவியுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டமான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம், 80.33 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற உதவியுள்ளது. இதில் எண்பது சதவீதம் கிராமப்புறங்களில் இருந்தன. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை தொடங்கப்பட்டதிலிருந்து கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ. 9.80 லட்சம் கோடி மதிப்பிலான 1.18 கோடிக்கும் அதிகமான கடன் உத்தரவாதங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2024-25 - ம் நிதியாண்டில் மட்டும் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடன் உத்தரவாதத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2029 - ம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று மத்திய அமைச்சர் கூறினார். கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோர் மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று திரு. மஞ்சி மேலும் கூறினார். தாமதமான பணம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தீர்வு காண உதவும் ஆன்லைன் தளமான எம்எஸ்எம்இ சமதான் போர்ட்டலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தற்போது 44,000 - மாகக் குறைந்துள்ளது. இது அக்டோபர் 2017 - ம் ஆண்டு நிலவரப்படி 93,000 வழக்குகளாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.
காதி, கிராமத் தொழில்கள் வாரியம், கயிறு வாரியம், தேசிய சிறு தொழில்கள் கழகம் போன்ற அமைப்புகள் மற்றும் எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிறு தொழில்கள் மற்றும் கிராமப் பொருட்கள் தொடர்பான திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதில் சிறப்பாக செயல்படுவதாக திரு. மஞ்சி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142170
******
AD/TS/SV/KGP/SG
(Release ID: 2142247)