இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா நீர் விளையாட்டுகள் விழா ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
Posted On:
03 JUL 2025 5:17PM by PIB Chennai
கேலோ இந்தியா நீர் விளையாட்டுகள் விழா முதல் முறையாக ஸ்ரீநகரின் சிறப்புமிக்க தால் ஏரியில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறவுள்ளது. இதனை இன்று (03.07.2025) மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
கடந்த மே மாதம் டையூவில் முதல் முறையாக கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் நடைபெற்ற பின்னணியில் ஜம்மு-காஷ்மீரில் நீர் விளையாட்டுகள் நடைபெறவுள்ளன. சிறிய வகை படகுப் போட்டி, பெரியவகை படகுப் போட்டி, நீர்ச்சறுக்கு, ஷிக்காரா பந்தயம், டிராகன் படகுப்போட்டி என ஐந்துவகைகளில் போட்டிகள் நடைபெறும்.
அனைத்து வயதினருக்குமான இந்தப் போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 400-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தால் ஏரியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகள் வளர்ந்துவரும் திறமைசாலிகளை கண்டறியவும், சர்வதேச போட்டிகளுக்கு அவர்களை தயார்படுத்தவும் உதவும் என்று அமைச்சர் டாக்டர் மாண்டவியா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141840
***
AD/SMB/AG/DL
(Release ID: 2141898)