விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் ஜூலை 3, 4-ம் தேதிகளில் ஜம்மு-காஷ்மீரில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 02 JUL 2025 3:21PM by PIB Chennai

மத்திய வேளாண், விவசாயிகள் நலன், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் ஜூலை 3, 4-ம் தேதிகளில் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, ​​அவர் உயர்நிலைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு மற்றும் கல்வித்துறை தொடர்பான முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.

ஜூலை 3-ம் தேதி காலை, திரு சிவராஜ் சிங் சௌஹான் ஸ்ரீநகரில் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் உயர் அதிகாரிகளுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்துவார். பிற்பகலில், இயற்கை வேளாண்மை மற்றும் தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம் குறித்த வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார். மாலையில், ஜம்மு & காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, ​​ராஜ் பவனில் ஏற்பாடு செய்துள்ள மரியாதை நிமித்தமான சந்திப்பில் அவர் கலந்து கொள்வார்.

பயணத்தின் இரண்டாவது நாளில், ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின்  ஆறாவது பட்டமளிப்பு விழாவில் திரு சிவராஜ் சிங் சவுகான் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார். இது பல்கலைக்கழகத்தின் ஷாலிமார் மாநாட்டு மையத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஜம்மு & காஷ்மீரின் துணை நிலை ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான திரு மனோஜ் சின்ஹா, முதலமைச்சரும் இணைவேந்தருமான திரு உமர் அப்துல்லா ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.

பட்டமளிப்பு விழாவின் போது, ​​5,250 மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் வழங்கப்படும். கூடுதலாக, சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வித் திறனைப் பாராட்டி 150 தங்கப் பதக்கங்களும் 445 தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141505 

******

AD/TS/IR/KPG/KR


(Release ID: 2141579)