நிலக்கரி அமைச்சகம்
தனிப்பயன்பாடு மற்றும் வணிக உற்பத்திக்கான நிலக்கரிச் சுரங்கங்களின் உற்பத்தி ஜூன் 2025 –ல் அதிகரிப்பு
Posted On:
02 JUL 2025 11:20AM by PIB Chennai
தனிப்பயன்பாட்டு (கேப்டிவ்) மற்றும் வணிக நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து 2025 ஜூன் மாத நிலக்கரி உற்பத்தி 15.57 மில்லியன் டன்களாகவும், விநியோகம் 17.31 மில்லியன் டன்களாகவும் பதிவாகியுள்ளது.
2025–26-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சி காணப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது உற்பத்தி 16.39 சதவீதமும் விநியோகம் 13.03 சதவீதமும் அதிகரித்துக் காணப்பட்டது. இது மேம்பட்ட செயல்திறனையும் சிறந்த சுரங்க செயல்பாட்டையும் பிரதிபலிக்கிறது.
தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளில் நிலையான செயல்திறனும் சிறந்த முன்னேற்றமும் ஏற்பட்டு வருகிறது. உற்பத்தி, விநியோகம் இரண்டுமே நன்கு அதிகரித்துள்ளன.
ஜூன் 2025-ல் முக்கிய முன்னேற்றங்கள்:
• 25 மில்லியன் உச்ச திறன் கொண்ட உத்கல் ஏ சுரங்கத்திற்கு சுரங்கத் திட்டத் திறப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.
• மூன்று நிலக்கரித் தொகுதிகளுக்கு உரிமை ஆணைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் நிலக்கரி அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்ட மொத்த நிலக்கரித் தொகுதிகளின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக உயர்ந்தது.
• இந்த அதிகரிப்பு மின் உற்பத்தி, எஃகு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி போன்ற முக்கிய தொழில்களுக்கு தடையற்ற நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்கிறது.
**
(Release ID: 2141432)
AD/TS/PLM/KPG/KR
(Release ID: 2141472)