நிதி அமைச்சகம்
2025 மே வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் குறித்த ஆய்வு (நிதியாண்டு 2025-26)
प्रविष्टि तिथि:
30 JUN 2025 4:22PM by PIB Chennai
2025 மே மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: -
மத்திய அரசின் மொத்த வருவாய் 2025 மே மாதம் வரை 7,32,963 கோடி ரூபாயாகும். (இது 2025 – 2026 ம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 21.0% ஆகும்). இதில் வரி வருவாய் 3,50,862 கோடி ரூபாயாகவும், வரி அல்லாத வருவாய், 3,56,877 கோடி ரூபாயாகவும் கடன் அல்லாத மூலதன வருவாய் 25,224 கோடி ரூபாயாகவும் உள்ளது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசு வரிப் பகிர்வு மூலம் 1,63,471 கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு வழங்கி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 23,720 கோடி ரூபாய் அதிகமாகும்.
மத்திய அரசின் மொத்த செலவினத் தொகை 7,46,126 கோடி ரூபாய் ஆகும். (2025 – 2026 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 14.7% ஆகும்) இதில் 5,24,772 கோடி ரூபாய் வருவாய் செலவினமாகவும், 2,21,354 கோடி ரூபாய் மூலதன செலவினமாகவும் உள்ளது. மொத்த வருவாயின செலவினங்களில், 1,47,788 கோடி ரூபாய் வட்டி செலுத்துதலுக்கும், 51,253 கோடி ரூபாய் முக்கிய மானியங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது.
***
(Release ID: 2140807)
AD/TS/GK/LDN/KR/DL
(रिलीज़ आईडी: 2140900)
आगंतुक पटल : 13