பிரதமர் அலுவலகம்
ஹூல் திவஸ் - ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மற்றும் ஜமீன்தார் முறைக்கு எதிரான போராட்ட தினத்தையொட்டி பழங்குடியின வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி
Posted On:
30 JUN 2025 2:28PM by PIB Chennai
ஹூல் திவஸ் எனப்படும் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் மற்றும் ஜமீன்தார் முறையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூரும் வகையில் கடைபிடிக்கப்படும் இத்தினத்தையொட்டி இந்தியாவின் பழங்குடியின சமூகங்களின் அசாத்திய துணிச்சலுக்கும் அசாதாரணமான வீரத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். வரலாற்று சிறப்புமிக்க சந்தால் எழுச்சியை நினைவுகூரும் வகையில், காலனித்துவ ஒடுக்குமுறையை எதிர்த்து தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த எண்ணற்ற துணிச்சலான பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களான சிடோ-கன்ஹு, சந்த்-பைரவ் மற்றும் பூலோ-ஜானோ ஆகியோரின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பிரதமர் மரியாதை செலுத்தினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஹூல் திவாஸ் எனப்படும் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் மற்றும் ஜமீன்தார் முறையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூரும் இத்தினம் பழங்குடியின சமூகத்தின் அசாத்திய துணிச்சலையும் அசாதாரண வீரத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. வரலாற்று சிறப்புமிக்க சந்தால் புரட்சியுடன் தொடர்புடைய இந்த சிறப்புமிக்க தருணத்தில், அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து துணிச்சலான பழங்குடியின மக்களுடன் சேர்ந்து, சிடோ-கன்ஹு, சந்த்-பைரவ் மற்றும் பூலோ-ஜானோ ஆகியோருக்கு மனமார்ந்த அஞ்சலி மற்றும் வணக்கத்தை செலுத்துகிறோம். அவர்களின் துணிச்சலான செயல்பாடுகள், தாய்நாட்டின் சுயமரியாதையைப் பாதுகாக்க நாட்டின் ஒவ்வொரு தலைமுறையையும் தொடர்ந்து ஊக்குவிக்கும்."
---
(Release ID 2140737)
AD/TS/SV/KPG/KR/DL
(Release ID: 2140897)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam