பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனேயில் உள்ள ராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தின் கமாண்டண்டாக ரியர் அட்மிரல் வி கணபதி பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 30 JUN 2025 3:56PM by PIB Chennai

புனேயில் உள்ள ராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தின் கமாண்டண்டாக இந்திய கடற்படையின் திறமையான அதிகாரியான ரியர் அட்மிரல் வி கணபதி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமையகத்தில் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது புகழ்பெற்ற கடற்படை சேவையில், ரியர் அட்மிரல் கணபதி பல முக்கிய செயல்பாட்டு, பணியாளர் மற்றும் பயிற்றுவிப்பு நியமனங்களை வகித்துள்ளார். இவர் செயல்பாட்டு நுண்ணறிவு, நிறுவன தலைமைத்துவம் மற்றும் எதிர்காலம் சார்ந்த சிந்தனை ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளவர் ஆவார். பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

இந்தியாவின் முதன்மையான முப்படை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் தலைவராக, அவர் தற்போது இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை அதிநவீன ராணுவ தொழில்நுட்பங்களில் தயார்படுத்தும் பணியை வழிநடத்துகிறார்.

***

(Release ID: 2140782)

AD/TS/IR/AG/DL


(रिलीज़ आईडी: 2140896) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी