பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடிமக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 30 JUN 2025 3:22PM by PIB Chennai

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதிலிருந்து குடிமக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் சூழல் சார் அமைப்பிற்கு மாறுவது நாட்டின் நிர்வாக மற்றும் சமூக-பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முக்கியமானது என்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் டிஜிட்டல் நிர்வாகத்தின் மாற்றத்தக்க பங்கு குறித்தும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று சுட்டிக்காட்டினார்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தெற்கு மண்டல மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த பத்தாண்டுகளில் தொடங்கப்பட்ட முயற்சிகள் சேவை வழங்கலை எவ்வாறு நெறிப்படுத்தியுள்ளன என்பது மட்டுமல்லாமல், குடிமக்களுக்கு, குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளித்துள்ளன என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

டிஜிட்டல் இந்தியாவில் குடிமக்களுக்கு அதிகாரமளித்தல்: நிர்வாகம், மேலாண்மை மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் என்ற மாநாட்டின் கருப்பொருளானது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வளர்ந்து வரும் தேசிய ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்தியப் பொது நிர்வாக நிறுவனத்தின் புதுச்சேரி மண்டலக் கிளை மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், பல்கலைக்கழகத்தில் ஒரு ஆளுகைப் பிரிவும் தொடங்கி வைக்கப்பட்டது. இது  நிர்வாகம், சீர்திருத்தம் மற்றும் நாட்டைக் கட்டமைப்பதில் உரிய வகையில் இளையோர்கள் ஈடுபட ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு எதிர்கால முயற்சியாகும் என்று அவர் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140764

***

AD/TS/IR/AG/KR

 

 


(Release ID: 2140828) Visitor Counter : 5
Read this release in: English , Urdu , Hindi , Punjabi