புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத் தரவை அணுகுவதற்காக ஜிஓஐ ஸ்டாட்ஸ் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது புள்ளியியல் அமைச்சகம்
प्रविष्टि तिथि:
29 JUN 2025 6:43PM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், புள்ளியியல் தினமான இன்று (ஜூன் 29) ஜிஓஐ ஸ்டாட்ஸ் (GoIStats) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி அனைத்து மக்களுக்கும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை எளிதில் அணுகுவதற்கான உறுதிப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
ஜிஓஐ ஸ்டாட்ஸ் மொபைல் செயலியானது அனைத்தையும் உள்ளடக்கிய தரவு சூழல் அமைப்பை உருவாக்கும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. இந்த செயலியில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், வேலைவாய்ப்பு தரவு உள்ளிட்ட முக்கியமான சமூக-பொருளாதார அம்சங்களை விளக்கும் தகவல் பலகை உள்ளது.
தற்போது இந்த மொபைல் செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. ஐஓஎஸ் (iOS) பதிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த இணைப்பைப் பயன்படுத்தி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதைப் பதிவிறக்கம் செய்யலாம்: https://play.google.com/store/apps/details?id=in.gov.mospi.goistats&hl=en_IN
*****
(Release ID: 2140618)
AD/TS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2140648)
आगंतुक पटल : 33