தேர்தல் ஆணையம்
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது
प्रविष्टि तिथि:
28 JUN 2025 1:31PM by PIB Chennai
1. அரசியலமைப்புச் சட்டம் உயர் சிறப்பானது. அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் அரசியலமைப்பைப் பின்பற்றுகின்றனர்.
2. பிரிவு 326 வாக்காளராக மாறுவதற்கான தகுதியைக் குறிப்பிடுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் இதற்குத் தகுதியுடையவர்கள்.
3. அனைத்து அரசியல் கட்சிகளின் முழு பங்கேற்புடன் ஒவ்வொரு வாக்காளரின் தகுதியையும் சரிபார்க்க பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சுருக்கமுறைத் திருத்தம் (SIR) ஏற்கனவே வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
4. தேர்தல் ஆணையம் ஏற்கனவே 77,895 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளைப் (BLOs) பணியில் ஈடுபடுத்தியுள்ளது. புதிய வாக்குச் சாவடிகளுக்கு கிட்டத்தட்ட 20,603 கூடுதல் அதிகாரிகளை நியமித்து வருகிறது.
5. சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உண்மையான வாக்காளர்களுக்கு, குறிப்பாக வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் (PwD), ஏழைகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு உதவுவார்கள்.
6. தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளும் ஏற்கனவே 1,54,977 வாக்குச்சாவடி நிலை முகவர்களை (BLA) நியமித்துள்ளன. அவர்கள் இன்னும் அதிகமான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கலாம்.
7. பீகாரின் 243 சட்டமன்றத் தொகுதிகளிலும் பீகாரில் தற்போதுள்ள 7,89,69,844 வாக்காளர்களுக்கான புதிய கணக்கெடுப்பு படிவங்களை (EF) அச்சிடுதல் மற்றும் வீடு வீடாக விநியோகித்தல் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. புதிய கணக்கெடுப்பு படிவங்களை (EF) இணையதளம் மூலம் நிரப்புதல் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு, வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
8. தற்போதுள்ள 7,89,69,844 வாக்காளர்களில், 01.01.2003 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பெயர்களைக் கொண்ட 4.96 கோடி வாக்காளர்கள், கணக்கெடுப்புப் படிவத்தை சரிபார்த்து, அதை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
9. அனைத்து பிரிவு ஆணையர்களும் மாவட்ட ஆட்சியர்களும் சுருக்க முறை திருத்தத்தின் போது அனைத்து வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளையும் முழுநேரமாக பணியில் ஈடுபடுத்துகிறார்கள்.
10. பீகாரின் 5,74,07,022 பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களுக்கும் குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
11. சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அட்டவணைப்படி சிறப்பாக நடந்து வருகின்றன.
*****
(Release ID: 2140374)
AD/TS/PLM/SG
(रिलीज़ आईडी: 2140445)