பாதுகாப்பு அமைச்சகம்
சீனாவின் கிங்டாவோவ் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்
प्रविष्टि तिथि:
27 JUN 2025 10:01AM by PIB Chennai
சீனாவின் கிங்டாவோ நகரில் நேற்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கிடையே, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் திரு ஆண்ட்ரி பெலோசோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், தற்போதைய புவிசார் அரசியல் சூழ்ல்கள், எல்லை தாண்டிய தீவிரவாதம், இந்திய - ரஷ்ய பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவவர்களும் விவாதித்தனர்.
இந்தியா - ரஷ்யா இடையேயான நீண்டகால நல்லுறவு குறித்து அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதல் கோழைத்தனமானது என்று கூறிய அவர், இந்தியாவுடன் வலுவான நட்புறவு கொண்டுள்ளதாக கூறினார்.
இந்த சந்திப்பின் போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அதன் காரணமாக பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இருதலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இந்த விவாதத்தில் குறிப்பாக வான் பாதுகாப்பு, ஏவுகணைகள், நவீன பாதுகாப்புத் திறன்கள், விமானப்படைத் தளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்கள் குறித்தும் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குதல், சுகோய்-30 ரக போர் விமானங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்களை குறித்த காலத்திற்குள் கொள்முதல் செய்தல் போன்ற அம்சங்கள் குறித்தும் விவாதித்தனர்.
------
(Release ID: 2140036)
AD/TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2140124)
आगंतुक पटल : 10