சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சி - மத்திய இணையமைச்சர் திரு பி.எல். வர்மா தலைமை வகித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUN 2025 5:41PM by PIB Chennai

போதைப் பொருள் பயன்பாட்டின் விளைவுகள் தனிநபர்களையும்  குடும்பத்தினரையும் மட்டும் பாதிக்காமல் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிப்பதாகவும் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதே அரசின் இலக்கு என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்  இணையமைச்சர் திரு பி.எல். வர்மா கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத் தின நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றியபோதுஅவர் இவ்வாறு கூறினார்.

போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார். போதைப் பொருள்கள் இல்லாத இந்தியா இயக்கம் எவ்வாறு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பதையும் அவர் விளக்கினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். போதைப்பொருள் ஒழிப்பும் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக இணையமைச்சர் திரு பி எல் வர்மா கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது போதைப் பொருள் தடுப்பு தொடர்பான நாடகம் இடம் பெற்றது. இது போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தியது.

 

இந்த நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சக அதிகாரிகள், பிற மத்திய அமைச்சகங்களின் பிரதிநிதிகள், ஆன்மீக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், இளைஞர் தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த  சுமார் 700 பிரதிநிதிகள்  பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139886

----

TS/PLM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2139937) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam