சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்க அமைச்சகமும் நிலக்கரி அமைச்சகமும் இணைந்து குவஹாத்தியில் வடகிழக்குப் பகுதி புவியியல் மற்றும் சுரங்க அமைச்சர்கள் மாநாட்டை நடத்தவுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUN 2025 5:19PM by PIB Chennai
வடகிழக்கு பிராந்தியத்தின் (NER) கனிம மற்றும் நிலக்கரி திறனை ஆய்வு செய்து வெளிக்கொணர்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சுரங்கங்கள் அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம் ஆகியவை அசாம் மாநில அரசுடன் இணைந்து, 2-வது வடகிழக்கு பகுதி புவியியல் மற்றும் சுரங்க அமைச்சர்கள் மாநாட்டை 2025 ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் குவஹாத்தியில் நடத்த உள்ளன. மத்திய அரசின் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில், எட்டு வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். அசாம் முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொள்வார்.
நிலையான சுரங்க நடைமுறைகளை ஊக்குவித்தல், கனிம வளத் துறையில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், கனிமத்துறையில் சமச்சீர் பிராந்திய வளர்ச்சிக்காக மத்திய-மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்தில் ஏற்கனவே நடைபெற்ற முதல் மாநாட்டின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆண்டு இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கனிம வளம் தொடர்பான ஆலோசனை அமர்வுகள் இடம்பெறுவதுடன் கனிம ஆய்வுகளை விரைவுபடுத்த மத்திய மாநில அரசு நிறுவனங்களுக்கு இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். வடகிழக்குப் பகுதியில் நடைபெற்று வரும் சுரங்க ஆய்வுத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139877
**
TS/PLM/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2139932)
வருகையாளர் எண்ணிக்கை : 15