மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உத்தரப்பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் ரூ.417 கோடி மதிப்பில் மின்னணு உற்பத்தி தொகுப்பு அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
Posted On:
25 JUN 2025 4:11PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் ரூ.417 கோடி மதிப்பில் மின்னணு உற்பத்தி தொகுப்பு (EMC 2.0) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது உள்ளூர் உற்பத்தி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு. இதை அங்கீகரித்து, திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மின்னணு உற்பத்தி தொகுப்பு 2.0 திட்டம் யமுனா விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தால் உருவாக்கப்படும். இந்த தொகுப்பு 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, ரூ.2,500 கோடி முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான நிகழ்ச்சியில் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், "இத்திட்டம் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க வழிவகுக்கும் என்றும், 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139545
***
AD/TS/IR/AG/KR
(Release ID: 2139600)
Visitor Counter : 3