புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் பசுமை அமோனியா ஏல ஒப்பந்தப் புள்ளியை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

Posted On: 25 JUN 2025 12:56PM by PIB Chennai

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்ன பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய எரிசக்திக் கழகமானது பசுமை அமோனியாவின் உற்பத்தி, விநியோகம், தொடர்பான ஏலத்தில் பங்கேற்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதற்கான  திருத்தப்பட்ட கடைசி தேதி ஜூன் 30-ம்  ஆகும்.

2024-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி வெளியிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிக்கான அறிவிப்பு, பசுமை ஹைட்ரஜன் மாற்றத்திற்கான திட்ட நடைமுறைகள் 2ஏ, பகுதி I-ன் கீழ் வெளியிடப்பட்டதாகும். மேலும் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள 13 உர உற்பத்தி ஆலைகளுக்கு ஆண்டுதோறும் 7,24,000 மெட்ரிக் டன் பசுமை  அமோனியாவை உற்பத்தி செய்தல் மற்றும் நீண்டகாலம் விநியோககப்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.

சூரிய எரிசக்திக் கழகம் இதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமை அமோனியா உற்பத்தியாளர்களுடன் நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொள்ளும். இந்த ஒப்பந்தங்கள் 10 ஆண்டு காலத்திற்கு வர்த்தக ரீதியிலான செயல்பாடுகளை உறுதி செய்வதுடன் பசுமை ஹைட்ரஜனுக்கான  சந்தைக்கும் வழிவகுக்கும்.

இந்த ஒப்பந்தப் புள்ளி தொடர்பான விரிவான விவரங்களுக்கு இந்திய சூரிய சக்திக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.seci.co.in/tenders-என்பதைப் பார்வையிடவும்.

**

(Release ID: 2139447)

AD/TS/SV/KPG/KR


(Release ID: 2139490)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati