நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எக்ஸிம் வங்கியின் வர்த்தக மாநாட்டில் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான முக்கிய கொள்கை நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்

Posted On: 24 JUN 2025 6:13PM by PIB Chennai

வளர்ந்த பாரதத்திற்கான ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜூன் 24, 2025 அன்று இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம்), வர்த்தக மாநாடு 2025 ஐ நடத்தியது.

 

இந்த நிகழ்வில் பேசிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், எக்ஸிம் வங்கியின் வர்த்தக உதவித் திட்டம் இந்தியாவில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் வர்த்தக வசதி முயற்சியாகும், இது இந்திய ஏற்றுமதியாளர்கள் நிதி இடைவெளிகளைக் குறைப்பதன் மூலம் அதிக ஆபத்துள்ள சந்தைகளை அணுக உதவுகிறது என்று எடுத்துரைத்தார். 2022 ஆம் ஆண்டில்  வர்த்தக உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, எக்ஸிம் வங்கி 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிகளுடன் கூட்டாண்மைகளை ஏற்படுத்தியுள்ளது, இது 51 நாடுகளில் 1,100 க்கும் மேற்பட்ட ஏற்றுமதி பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.

 

இந்திய ஏற்றுமதியாளர்களை மேம்படுத்தவும் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகளை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டினார். போக்குவரத்து மற்றும் தளவாடங்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார், இது விநியோகச் சங்கிலி திறன் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது.

 

மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக மாற்றும் முயற்சியின் கீழ் வர்த்தகத்திற்கான தொகுப்பு மேம்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் ஏற்றுமதியாளர்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அப்பால் தங்கள் உள்ளூர் மாவட்டங்களிலிருந்து நேரடியாக செயல்பட முடியும் என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

 

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் தருவாயில் உள்ள நிலையில், பல புவியியல் பகுதிகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களைப் பற்றி இந்தியா தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் பங்கையும் நிதியமைச்சர் எடுத்துரைத்தார், இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்றுமதி ₹5.3 லட்சம் கோடியைத் தாண்டியது.

 

இந்த நிகழ்வில் பேசிய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி, இந்திய ஏற்றுமதியாளர்களின் வளர்ந்து வரும் போட்டித்தன்மையையும், இந்திய நிறுவனங்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  கடன் வரத்தை மேம்படுத்த இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139285

 

 

****

(Release ID: 2139285)

AD/RB/DL


(Release ID: 2139399) Visitor Counter : 3