குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத்தலைவர் 2025 ஜூன் 25 முதல் 27 வரை உத்தராகண்ட் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUN 2025 5:43PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2025 ஜூன் 25 முதல் 27 வரை உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் மூன்றுநாள் பயணம் மேற்கொள்கிறார்.
ஜூன் 25 அன்று குமான் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாடத்திற்கு தலைமை தாங்கும் குடியரசுத் தலைவர் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே உரையாற்றுவார்.
ஜூன் 27 அன்று ஷெர்வுட் கல்லூரியின் 156-வது நிறுவுனர் தினக் கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார்.
இந்தப் பயணத்தின் போது குடியரசு துணைத்தலைவர் நைனிடாலில் உள்ள ஆளுநர் மாளிகைக்கும் செல்லவிருக்கிறார்.
***
(Release ID: 2139264)
TS/SMB/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2139321)
வருகையாளர் எண்ணிக்கை : 26