கனரகத் தொழில்கள் அமைச்சகம்
இந்தியாவில் பயணிகள் மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்ப நடைமுறைக்கான இணையப்பக்கத்தை தொடங்கியதன் மூலம் உலகளாவிய மின்சார வாகன பெருநிறுவனங்களுக்கு இந்தியா தனது கதவுகளை திறந்துள்ளது
प्रविष्टि तिथि:
24 JUN 2025 1:13PM by PIB Chennai
இந்தியாவில் பயணிகள் மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்ப நடைமுறைக்கான இணையப்பக்கம் தொடங்குவது பற்றிய அறிவிப்பை மத்திய கனரகத் தொழில்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்த அறிவிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அமைச்சகத்தின் https://heavyindustries.gov.in/scheme-promote-manufacturing-electric-passenger-cars-india-0 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
இந்நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உரிய விண்ணப்பத்தின் மூலம் spmepci.heavyindustries.gov.in என்ற இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். 2025 ஜூன் 24 முதல் 2025 அக்டோபர் 21 மாலை 6.00 மணி வரை விண்ணப்பம் செய்வதற்காக இந்த இணையப்பக்கம் திறந்திருக்கும்.
உலகளாவிய மின்சார வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கவும், மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவும். உலகளாவிய உற்பத்தியாளர்களின் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35,000 அமெரிக்க டாலர் சிஐஎஃப் மதிப்புள்ள நான்கு சக்கர பயணிகள் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு 15 சதவீத சுங்கவரி குறைக்கப்படும். இந்தத் திட்டத்தில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.4150 கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139145
***
AD/TS/SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2139268)
आगंतुक पटल : 22