பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தனது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டில் ஆற்றிய 51 உரைகளின் தொகுப்பை பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 JUN 2025 5:30PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜூன் 23-ஆம் தேதி, ‘விங்ஸ் டு அவர் ஹோப்ஸ் (தொகுதி-2)’ என்ற குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் 51 உரைகளின் தொகுப்பின் மின்னணு பதிப்பை வெளியிட்டார். புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். குடியரசுத்தலைவரின் பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டில் (ஆகஸ்ட் 2023 - ஜூலை 2024) அவரது தொலைநோக்குப் பார்வை, தத்துவம் மற்றும் முன்னுரிமைகள் குறித்த பார்வையை இந்தப் புத்தகம், வழங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கச் செய்வதற்கான மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைக்கும் வகையில் இந்தப் புத்தகத்தின் தொகுப்பு அமைந்துள்ளது என்று கூறினார். நாட்டு மக்களுக்கும், பல்கலைக்கழகங்களிலும் அவர் ஆற்றிய உரை, புதுமை, நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு, சமத்துவம், கலாச்சார பாரம்பரியம் போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டதாக இந்த உரையின் தொகுப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், முற்போக்கு சிந்தனைகளுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டியாக திகழும் என்று கூறினார். நாட்டின் பன்முகத்தன்மை, விளிம்புநிலை மக்கள் எதிர்கொண்டுவரும் சிரமங்கள் மற்றும் சமத்துவ உணர்வு குறித்தும் இந்தப் புத்தகம் விரிவாக எடுத்துரைக்கிறது என்று அவர் கூறினார்.
நாகரிகம் முதல் கலாச்சாரம் வரை, மதம் முதல் அறிவியல் வரை, கலை முதல் இலக்கியம் வரை, கல்வி முதல் சுகாதாரம் வரை, கடந்த காலம் முதல் எதிர்காலம் வரை என பல்வேறு துறைகளில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் ஞானம், கருத்துக்களின் கலவையாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது என்றும் திரு ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார். இந்த புத்தகம் எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக அமையும் என்று திரு ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2138941
----
AD/RB/SV/LDN/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2139045)
வருகையாளர் எண்ணிக்கை : 20