இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

11-வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட தில்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் 1500க்கும் மேற்பட்ட ஆர்வலர்களுடன் டாக்டர் மன்சுக் மண்டவியா யோகா பயிற்சி மேற்கொண்டார்

Posted On: 21 JUN 2025 5:11PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து நாடு முழுவதும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து தலைமை தாங்கினார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பிரதமர், "யோகா உலகை ஒன்றிணைத்துள்ளது, அது அனைவருக்கும், எல்லைகளுக்கு அப்பால், பின்னணிகளுக்கு அப்பால், வயது அல்லது திறனுக்கு அப்பாற்பட்டது" என்று கூறினார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா சனிக்கிழமை, இந்திரா காந்தி ஸ்டேடியத்தில், ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா சங்கத்தின் கீழ் நடத்தப்பட்ட ஃபிட் இந்தியா  யோகாதானில், மை பாரதத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உட்பட 1500-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்களுடன் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.

‘ஒரு பூமிக்கான யோகா, ஒரு ஆரோக்கியம்’ என்ற கருப்பொருளை ஆதரித்து, இந்திய விளையாட்டு ஆணையத்தின்  பிராந்திய மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள், பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா மையங்கள்  மற்றும் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள்  உள்ளிட்ட அதன் அனைத்து மையங்களிலும் யோகா சங்கமத்துக்கு ஏற்பாடு செய்தது.

டாக்டர் மண்டவியாவுடன் முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால், காமன்வெல்த் விளையாட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற பிரியங்கா கோஸ்வாமி, பிரபல நடிகர்கள் ஜாக்கி பக்னானி, ராகுல் ப்ரீத் சிங், மதுரிமா துலி ஆகியோர் பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர். மேலும், மத்திய விளையாட்டு அமைச்சர், நடிகர்-தயாரிப்பாளர் தம்பதிகளான ராகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி ஆகியோரை ஃபிட் இந்தியா தூதர்களாக  அறிவித்து அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

சர்வதேச யோகா தினம் மற்றும் யோகா சங்கம் முயற்சி பற்றிப் பேசிய டாக்டர் மன்சுக் மண்டவியா, “சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். யோகா நமது கலாச்சாரம், அது நமது அன்றாட வாழ்வில் சேர்க்கப்பட வேண்டும். 'ஒரு பூமிக்கு யோகா, ஒரு ஆரோக்கியம்' என்ற கருப்பொருளுடன் யோகா சங்கத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஃபிட் இந்தியா கல்ட் யோகாதான் மூலம், விளையாட்டு அமைச்சகம் சர்வதேச யோகா தினத்தையும் கொண்டாடுகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களும் ஆரோக்கியமாக இருக்க தொடர்ந்து யோகா செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். யோகா என்பது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மந்திரம்.” என்று கூறினார்.

தியானம் மற்றும் யோகா நித்ராவை உள்ளடக்கிய ஒரு நாள் நிகழ்வில் பங்கேற்க பல்வேறு வயதுக் குழுக்கள், பின்னணிகள் மற்றும் உடற்பயிற்சி நிலைகளைச் சேர்ந்த நபர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த கூட்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், காலத்தால் அழியாத யோகா பயிற்சி மற்றும் இன்றைய உலகில் அதன் நீடித்த பொருத்தத்திற்கான அதன் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.

****

(Release ID: 2138433)

AD/PKV/RJ


(Release ID: 2138643)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati