பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் யோகா தின கொண்டாட்டங்கள் - பாட்னாவில் யோகா நிகழ்வில் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
21 JUN 2025 12:43PM by PIB Chennai
பீகாரின் பாட்னாவில் உள்ள குடா பக்ஷ் ஓரியண்டல் நூலகத்தில் 11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா அமர்வில் மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் அனைத்து மக்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் யோகாவைப் பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா கோட்டை வளாகத்தில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டங்களில் மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் கலந்து கொண்டார்.
புதுதில்லி கஸ்தூர்பா காந்தி மார்க்கில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற யோகா அமர்வில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், கூடுதல் செயலாளர் திரு சுஷில் குமார் லோஹானி மற்றும் அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
****
(Release ID: 2138283)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2138411)
आगंतुक पटल : 30