கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள முக்கிய நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு இந்திய தொல்லியல் ஆய்வு மையம் ஏற்பாடு

प्रविष्टि तिथि: 19 JUN 2025 3:55PM by PIB Chennai

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தொல்லியல் ஆய்வு மையத்தின் சார்பில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள முக்கிய நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் சனிக்கிழமை காலை 6:00 மணி முதல் காலை 7:45 மணி வரை நடைபெறும். பிரதமர் உரையின் நேரடி ஒளிபரப்புடன் இந்த நிகழ்ச்சி  தொடங்குகிறது.  இதனைத் தொடர்ந்து நடைபெறும் யோகா நெறிமுறை அமர்வில் பங்கேற்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.  உடல் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையாக உள்ள யோகக் கலையை ஊக்குவிப்பதற்கு உதவுகிறது.

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐநா சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி அறிவித்தது. இதனையடுத்து உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் யோகா தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். சர்வதேச யோகா தினம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டு நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலவாழ்வை மேம்படுத்தும் உலகளாவிய இயக்கமாக உருவெடுக்கச்ச செய்யும் வகையில் கொண்டாடப்பட உள்ளது.

 

சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுகூரும் வகையில், இந்திய தொல்லியல் ஆய்வு மையம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களில் யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள 100 முக்கிய இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2137670

***

VL/AD/SV/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2137770) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi